காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர்
காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்யாமல் விவசாயம் நலிவடைந்த நிலையில் பலர் திருப்பூர் போன்ற நகரங்களில் வெவ்வேறு தொழில்களை நாடிச்சென்றனர்
அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மான் மற்றும் மயில்களால் பயிர்கள் நாசமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
குக்கிராமங்கள் அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்கள் உள்ளன.
கடந்த 40, 50 ஆண்டு களுக்கு முன் தென்னை, வாழை, மஞ்சள், நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தாற்போல் லேசான காற்றுக்கு பயிர்கள் அசைவது ரம்மியமாக காட்சியளிக்கும்.
.
இருப்பினும் பழமையை மறவாமல் விவசாயம்தான் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அங்கம் என்ற நோக்கில் பல இன்னல்களுக்கு இடையே சில விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் செய்து வருகின்றனர்.