Home கனடா கனேடிய தேர்தலில் சீனா தலையீடு செய்யவில்லை

கனேடிய தேர்தலில் சீனா தலையீடு செய்யவில்லை

by Jey

கனேடிய பொதுத் தேர்தலில் சீனா தலையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய பிரதம தேர்தல் அதிகாரி ஸ்டிபென் பெரொல்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டில் கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சீனா தலையீடு செய்தது என கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

11 வேட்பாளர்களின் பிரச்சாரத்திற்கு சீனா நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கனடாவில் சுயாதீனமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என கருதுவதற்கு அவசியமில்லை என பிரதம தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் முறைகேடுகள் ஏற்பட்டதாக தமக்கு எவ்வித அறிக்கைகளும் கிடைக்கவில்லை என  அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புளொக் கியூபிக்கோ கட்சி, தேர்தலில் சீனா தலையீடு செய்துள்ளது என குற்றம் சுமத்தி முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

related posts