.தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து அதிரடி வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது. போல்ட் மற்றும் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோருக்குப் பிறகு, இந்த ஆண்டு மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்ட்ட மூன்றாவது வீரர் கப்தில் ஆவார்.டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது, டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பெற்றார்.
எனினும் பின் ஆலனுக்கு நியூசிலாந்து அணி முக்கியத்துவம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கப்தில் கூறுகையில் ; எனது நாட்டிற்காக விளையாடுவது ஒரு பெரிய கவுரவமாகும், மேலும் நியூசிலாந்து அணியில் உள்ள அனைவருக்கும் அவர்களின் ஆதரவிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,”.என கூறியுள்ளார் நியூசிலாந்து அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள கப்தில் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 3-வது நியூசிலாந்து வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் போன்ற பெருமைகளை மார்டின் கப்தில் கொண்டுள்ளார்.