முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர்காலத்தில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாளான இன்று (25) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் வரவு செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின்சார கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
நாட்டை யார் ஆட்சி செய்தாலும் இந்த நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்தப் பயணம் தொடர முடியாது.