இலங்கையில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நடத்திய ஆய்வில், துரித உணவுகள் மற்றும் இனிப்பு பானங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
துரித உணவு சாப்பிடாமல் இருப்பது, இனிப்பு பானங்கள் பயன்படுத்துவதை குறைப்பது, குறுகிய பயணத்திற்கு வாடகை வாகனங்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்ற செயல்கள் மக்களின் ஆரோக்கியத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகளுக்கு துரித உணவுகளை வழங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் கீரைகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பதும் இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 105 கிராமிய சேவை அலுவலர் பிரிவுகளைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொற்று அல்லாத நோய்களைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு திறம்பட பங்களிக்கும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், கல்லீரலில் கொழுப்பு சேர்வது போன்ற நோய்கள் வெகுவாக குறைந்துள்ளதையும் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.