Home இலங்கை அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கும் ஆயுத தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்

அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கும் ஆயுத தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்

by Jey

இலங்கையில் உள்ள 18 வது முதல் 20 வயதான அனைத்து இளைஞர்,யுவதிகளுக்கும் ஆயுத தாங்கிய இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருந்தார். நாட்டில் இளைஞர்களுக்கு ஆளுமை இல்லை.

நாட்டில் ஒழுக்கம் சீர்கெட்டுள்ளது. இளைஞர்களுக்கு திடமும் ஆளுமையும் இல்லை. 10 அடி ஆழமான கிணற்றில் குதித்தாலும் அவர் இறந்து போவார்.

கடலில் குளிக்க முடியவில்லை. தென்னை மரத்தில் ஏற முடியவில்லை. எமது நாடு எவ்வித தைரியமும் உறுதியும் இல்லாத நாடாக மாறியுள்ளது.

பாடசாலைக்கு செல்லும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் நாம் இராணுவப் பயிற்சியை வழங்க வேண்டும்.

உரிய வயதில் பாடசாலைகளில் சேர்ப்பது போன்று 18 முதல் 20 வயதான அனைவரும் ஆயுதம் தாங்கிய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

related posts