இத்தாலி நாட்டின் இஷியா தீவில் உள்ள காசாமிச்சியோலா நகரில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால் நேற்று அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் வீடுகள் உள்பட பல கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் உயிரோடு புதைந்தனர்.
இதையடுத்து அங்கு உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும் 8 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 13 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.