மீண்டும் எழுச்சி பெற்று வரும் கோவிட் வைரஸ் அண்மைய வாரங்களில் தொற்றுக்கு மாத்திரம் எட்டு மரணங்கள் பதிவாகியாகியுள்ளன
எனினும் வரவிருக்கும் வாரங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டினரின் வருகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு தடுப்பு விதிமுறைகளையும் சுகாதார அதிகாரிகள் விதிக்க மாட்டார்கள் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது போன்ற கடுமையான சுகாதார விதிமுறைகளை நாங்கள் விதிக்க முடியாது.
சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயை நாடு நம்பியுள்ளது. வரும் வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குளிர்கால நாடுகளில் இருந்து வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த வாரம் பதிவான எட்டு கோவிட் மரணங்களின் இறப்புகளில், பெரும்பான்மையானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
பூஜ்ஜிய கோவிட் கொள்கையை பராமரிக்கும் சீனா, ஆறு மாதங்களில் அதன் முதல் மரணத்தை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதுவர் பாலித கோஹன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முக்கியமாக கிழக்கு ஆசியாவிலிருந்து சுமார் 3000 சுற்றுலாப் பயணிகளுடன் மற்றொரு பயணக் கப்பலை நாடு எதிர்பார்க்கிறது.
இலங்கை சுற்றுலாத்துறையின் தகவலின்படி, இந்த மாதத்தில் இதுவரை 40,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.