Home விளையாட்டு இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில்

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில்

by Jey

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் வருகிற டிசம்பர் 10-ந்தேதி நடக்கிறது. இவற்றில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன் என இந்தியாவின் தங்க மங்கை என போற்றப்படும் கேரளாவை சேர்ந்த பி.டி. உஷா (வயது 58) கடந்த 26-ந்தேதி தனது விருப்பத்தினை வெளியிட்டார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், சக வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என குறிப்பிட்டார். தலைவர் பதவிக்கு அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சின்ஹா குறிப்பிட்டு உள்ளார். வேறு எந்த பதவிகளுக்கும் யாரும் நியமனம் செய்யப்படவில்லை என்றும் சின்ஹா கூறினார். இதனால், போட்டியின்றி தலைவர் பதவிக்கு பி.டி. உஷா தேர்வாகும் நிலை காணப்பட்டது.

related posts