Home இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் – ஹிருணிக்கா

ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் – ஹிருணிக்கா

by Jey

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கும் மற்றும் சவால்களுக்கும் முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் என்று கூறும் ஜனாதிபதியின் செயற்பாடு ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் போன்ற தலைவர்களுக்கு ஒரு நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது. ரணில் மக்களை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், கூச்சலிட வேண்டாம் எனவும் தெரிவிக்கின்றார்.

இது சிறந்த தலைவர் ஒருவருடைய பண்பல்ல. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கக்கூடிய தீர்வும் இதுவல்ல.

முதலில் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளை கண்டறிய வேண்டும். பின்னர் அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

முதலில் ஏன் அப்பாவி மக்கள் வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள் என்பதை அறிய வேண்டும். பசியின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு போராடுகிறார்கள்.

நாட்டு மக்களின் வாழ்க்கை தற்போது பாரியதொரு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. அதன் காரணமாகவே அவர்கள் போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிகளை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி போராடும் மக்களை இராணுவத்தை கொண்டு அடக்குவேன், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என்பது இதற்கான தீர்வல்ல.

நாட்டின் தலைவர்கள் மகாத்மா காந்தியை போன்று அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
சரித்திரத்தில் இடம்பதித்தோர்

காந்தி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், வரலாற்று புத்தகங்களில் நல்ல பக்கங்களில் எழுதப்படுகின்றன.

ஆனால் ஹிட்லர் போன்ற தலைவர்களின் பெயர்களை மக்கள் கேட்கும் போதே வெறுக்கின்றனர். தலைவர்கள் காந்தி போன்று இருக்க வேண்டும். ஹிட்லர் போன்றல்ல என தெரிவித்துள்ளார்.

related posts