Home சினிமா நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பாபா படம்

நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் பாபா படம்

by Jey

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த பாபா படம் 2002-ல் திரைக்கு வந்தது. நாயகியாக மனிஷா கொய்ரலா வந்தார்.

சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இருந்தார். இந்த படத்தில் ரஜினி காட்டும் பாபா முத்திரை அவரின் தனி அடையாளமாகவே மாறியது. தற்போது பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன.

புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். ஆரம்பத்தில் அவரது உரையோடு படம் தொடங்க உள்ளது. அத்துடன் படத்தில் உள்ள சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு புதிதாக குரல் பதிவும் செய்துள்ளார்.

ரஜினி டப்பிங் பேசிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. அடுத்த மாதம் டிஜிட்டலில் பாபா படம் திரைக்கு வர உள்ளது.

 

related posts