Home இந்தியா மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் மின்சாரம் ரத்தாகி விடுமா?

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் மின்சாரம் ரத்தாகி விடுமா?

by Jey

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கூறியதாவது, மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது.

related posts