Home விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 12 ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 12 ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி

by Jey

இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் (60-வது நிமிடம்) ஆகாஷ்தீப் சிங் அடித்த கோலால் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

முன்னதாக இந்திய தரப்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 12-வது நிமிடத்திலும், அபிஷேக் 47-வது நிமிடத்திலும், ஷாம்ஷெர் சிங் 57-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் வெல்ச் 25-வது நிமிடத்திலும், கேப்டன் அரென் ஜேல்ஸ்கி 32-வது நிமிடத்திலும், நாதன் எபிராம்ஸ் 59-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 12 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருந்த இந்திய அணி அந்த மோசமான பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் வருகிற 3-ந் தேதி நடக்கிறது.

related posts