Home விளையாட்டு இங்கிலாந்து அணி வீரர்கள் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை

இங்கிலாந்து அணி வீரர்கள் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை

by Jey

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று முதல் 5-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சென்று 20 ஓவர் தொடரில் விளையாடியது.

அதன் பிறகு தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருக்கிறது.

இந்த போட்டி திட்டமிட்டபடி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குமா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. இங்கிலாந்து அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 8 வீரர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 13 பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாந்தி மற்றும் வயிற்றுபோக்கால் அவதிப்பட்டு வரும் அவர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. வீரர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. வைரஸ் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதனால் இந்த போட்டியை ஒருநாள் தள்ளிவைக்கலாமா? என்பது குறித்து பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசித்து வருகின்றன. வீரர்கள் உடல் நிலை குறித்து இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

related posts