கடந்த காலங்களில் கோவில்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடையின் முகப்பு பெயர் பலகைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றில் ஓவியர்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் தங்களது கற்பனை நயத்தால் வரையும் ஓவியங்கள், எழுதும் எழுத்துக்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
இந்த ஓவியர்கள் தங்களது படைப்புகளை போட்டி போட்டி வெளிப்படுத்துவதும் உண்டு. இதனால் ஓவியம் சார்ந்த படிப்புகளும், அதனால் வேலைவாய்ப்புகளும் அதிகம் இருந்தன.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கியது. டிஜிட்டல் பேனர்கள், ஸ்டிக்கர் பிரிண்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களால் ஓவியக்கலை தனது இயல்பை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.
ஓவியத்தையே நம்பியே தங்களது வாழ்க்ைகயை நடத்தி வந்த ஓவியர்களும் போதுமான வேலைவாய்ப்பு இல்
லாமல் திண்டாடி வருகின்றனர்.
மாற்று தொழில் குறிப்பாக விழா காலங்கள், தேர்தல் நேரங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் ஓவியர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்ட காலங்களும் உண்டு. இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஓவியர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.