கோவிட் தடுப்பூசிகளுக்காக பெருமளவு பணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பொனி லிஸ்கீ இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை எற்றுவதற்காக மாகாண அரசாங்கம் மித மிஞ்சிய அளவில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆண்டொன்றுக்கு சுமார் 3.4 மில்லியன் தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கணக்காய்வாளர் நாயகத்தின் ஆண்டறிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.