சிறுவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டதாக றொரன்டோவைச் சேர்ந்த 23 பேர் உள்ளிட்ட 107 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இணைய வழியில் இந்த குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் மேலும் பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட ஏனைய தரப்புக்களுடன் இணைந்து இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணைகளுக்கு சட்ட மா அதிபரும் உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலத்திரனியல் சாதனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.