கேரள மாநிலம் அட்டப்பாடியில் காட்டு யானையை விரட்டிச் சென்ற அதிகாரிகளை யானை சுமார் 2கிலோ மீட்டர் தூரம் துரத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளூரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை இரண்டரை மணியலவில் நுழைந்த காட்டு யானையை, வனத்துறையினரின் ரேபிட் ரெஸ்பான்ஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் ஜீப்பில் சென்று விரட்ட முயன்றனர்.
சைரன் ஓலி மற்றும் லைட் வெளிச்சத்தை கண்டு மிரண்டு காட்டுயானை ஜீப்பை நோக்கி ஓடி வந்தது. இதனால் வனத்துறையினர் ஜீப்பை பின்னோக்கி இயக்கினர்.
யானை விடப்பிடியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் ஜீப்பை துரத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.