பாடசாலை வளாகம் ஒன்றினுள் போலி துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்பய்பட்டுள்ளனர்.
ஸ்காப்ரோ உயர்பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிகளை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் பாடசாலையை முடக்கி சோதனை நடாத்தியுள்ளனர்.
இதன் போது கையில் வைத்திருந்த துப்பாக்கி போலியானது என்பது கண்டறியப்பட்டது.
எவ்வாறெனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவம் இடம்பெற்ற பாடசாலையுமு; அருகாமையில இருந்த பாடசாலையும் முடக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.