றொரன்டோவில் இன்றைய தினமும் நாளையும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோ பகுதியில் இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயம் பற்றி அறிவித்துள்ளது.
மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
றொரன்டோவில் காலை வேளையிலும், ஒட்டாவாவில் பகல் வேளையிலும் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் சில பகுதிகளில் மழையும் பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.