Home கனடா கனடாவில் சளிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு

கனடாவில் சளிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு

by Jey

கனடாவில் சளிக்காய்ச்சல் நோய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அதிகளவில் இந்த சளிக்காய்ச்சல் நோய் தாக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்தில் 5891 ஆக காணப்பட்ட சளிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை இந்த வாரம் 8226   ஆக உயர்வடைந்துள்ளது.

சுமார் 14.8 வீதமாக சளிக்காய்ச்சல் நோயாளிகள் உயர்வடைந்துள்ளனர்.

சுமார் 4 வயது வரையிலான சிறார்கள் சளிக்காய்ச்சல் நோய் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சளிக்காய்ச்சல் காரணமாக 34 மரணங்கள் பதிவாகியுள்ளன.

related posts