றொரன்டோவில் மின்விநியோகத் தடை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த காற்று காரணமாக இவ்வாறு மின்விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
றொரன்டோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் பெருமளவில் மின்விநியோகத் தடையை எதிர்நோக்கியுள்ளனர்.
மரங்கள் முறிந்து வீழ்ந்தமை உள்ளிட்ட காரணிகளினால் மின்விநியோகம் தடைப்பட்டது.
எனினும், துரித கதியில் செயற்பட்ட றொரன்டோ ஹைட்ரோ மின்விநியோக நிறுவனம் பலருக்கு மீளவும் மின் விநியோகத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் பாதைகளை பயன்படுத்தும் போது மிகுந்த அவதானம் தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.