Home கனடா உணவுப் பணவீக்கம் தொடர்ந்தும் உயர்வடையும்

உணவுப் பணவீக்கம் தொடர்ந்தும் உயர்வடையும்

by Jey

கனடாவில் உணவுப் பணவீக்கம் தொடர்ந்தும் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2023ம் ஆண்டிலும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் மளிகைப் பொருட்களுக்கான விலைகள் 7 வீதத்தினால் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சராசரியாக நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றின் ஆண்டு மளிகைப் பொருள் செலவு 16288 டொலர்களாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக மளிகைப் பொருட்களுக்கான செலவு 1065 டொலர்களாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts