Home இலங்கை அத்தியாவசிய பொது சேவைகளாக பெட்ரோலிய பொருட்கள் விநியோகம்

அத்தியாவசிய பொது சேவைகளாக பெட்ரோலிய பொருட்கள் விநியோகம்

by Jey

அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொதுச் சேவைகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டு இலக்கம் 61ஆம் இலக்க பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்த நேற்று முன் தினம் (03.12.2022) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மின்சார விநியோகம், பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் ஆகியவை அத்தியாவசிய பொது சேவைகளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளுக்கு பராமரிப்பு, வரவேற்பு, கவனிப்பு உணவு, சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை, உழைப்பு என்பனவும் இந்த வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.

related posts