யுஎஸ்எய்ட் (USAID)நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் இலங்கை வந்துள்ளார். கௌர், இலங்கையின் நெருக்கடி தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன், பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை அறிய அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை சந்திக்கிறார்.
கடந்த வாரம் யுஎஸ்எய்ட்டின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் முன்னேற்றமாகவே, யுஎஸ்எய்ட் நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணியக பிரதி உதவி நிர்வாகியின் இலங்கை பயணம் அமைந்துள்ளது.