றொரன்டோவின் டான்போர்த் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிர்காப்பு முதலுதவிகள் வழங்கப்பட்ட போதிலும் குறித்த நபர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்ற போதிலும் எவ்வாறு காயங்கள் ஏற்பட்டது என்பது தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.