இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 657 ரன்களும், பாகிஸ்தான் 579 ரன்களும் குவித்தன. அடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிரடி காட்டிய இங்கிலாந்து 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 264 ரன்களுடன் துணிச்சலாக ‘டிக்ளேர்’ செய்தது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் மேற்கொண்டு 263 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் தொடர்ந்து பேட்டிங் செய்தது.
4-வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் கைகோர்த்து பாகிஸ்தானுக்கு ஓரளவு வலு சேர்த்தனர்.