மறைந்த இரண்டாம் எலிசபத் மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாணயக் குற்றியொன்றை கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் இந்த நாணயக் குற்றி புழக்கத்தில் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றி இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
நாணயக் குற்றியின் ஒரு பக்கத்தில் மறைந்த இரண்டாம் எலிசபத் மகாராணியின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய பக்கத்தில் பனிக் கரடி படம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயக்குற்றியை சுற்றி கறுப்பு நிற வளையமொன்று காணப்படுவதாகவும் இது மகாராணியின் மறைவிற்கு துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.