கனடாவில் பெருந்தொகை கோவிட் உதவு தொகை விரயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோவிட்19 பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவி நிதி வழங்கியிருந்தது.
இதன் போது தகுதியற்றவர்கள் பெருந்தொகை பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 4.6 பில்லியன் டொலர்கள் நிதி இவ்வாறு தகுதியற்றவர்களினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவசர நிவாரணமாக இந்த உதவு தொகை நாடு முழுவதிலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
இதன் போது சரியான முறையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில நபர்கள் போலியாக விண்ணப்பம் செய்து உதவு தொகையை மோசடியாக பெற்றுக்கொண்டுள்ளனர்.