நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தள்ளார்.
இது தொடர்பில் கூறுகையில்,“பாதுகாப்பு அமைச்சில் சில அதிகாரிகளின் சீருடைகள் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சில வதந்திகள் உள்ளன.
அதேபோன்று சில அதிகாரிகளின் மனைவிகள் வெளியில் பொருட்கள் வாங்க செல்லும் போது அவர்கள் திரும்பி வரும் வரை அவர்களின் வாகன சாரதிகள் வாகன குளிரூட்டியை(AC) போட்டுக்கொண்டே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரியை அதிகரிக்கும் அரசாங்கம் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.” என கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றிய முழு விடயத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்,