டொரன்டோ பெரும்பாக பகுதியில் பெட்ரோலின் விலை வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் பதிவான மிகக் குறைந்த விலை நாளைய தினம் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பெரும்பாக பகுதியில் இந்த ஆண்டில் பதிவாகும் மிகக் குறைந்த பெட்ரோல் விலை நாளை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 140.9 சதங்களாக பதிவாகி இருந்தது.
நாளைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 135.9 சதங்களாக வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி 135 சதத்திற்கு பெட்ரோல் ஒரு லிட்டர் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் இரண்டு டாலர்களை விடவும் அதிக தொகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.