டொரன்டோ ஹை பாக் ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளார்.
மற்றும் ஒருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நபர் ஒருவர் கத்தியை வைத்துக்கொண்டு ரயிலில் ஏறி இருப்பதாக போலீசாருக்கு அவசர தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த தகவல் பெற்றுக்கொண்ட போலீசார் அவசரமாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அதன்போது பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததாகவும் மற்றும் ஒருவர் காயமடைந்து இருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் உயிரிழந்த பெண் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.