Home இந்தியா மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

by Jey

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் இன்று இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (10.12.2022) 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

related posts