பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பறவை காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவக்கூடிய சாத்தியங்கள் குறைவாக காணப்பட்ட போதிலும் தொற்று பறவைகளுக்கு இடையில் பரவி வரும் வேகம் காரணமாக மனிதர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கால்நடை வளர்ப்பு பண்ணைகளில் பறவை காய்ச்சல் நோய் அதிக அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தில் வளர்ப்பு மற்றும் வன பறவைகளுக்கு இடையில் இந்த நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நோய்தொற்றால பாதிக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது.
எனவே இந்தத் தொற்று மனிதர்கள் மத்தியில் பரவக்கூடிய சாத்தியங்களை மறுப்பதற்கு இல்லை என மருத்துவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
எனவே இந்த நோய் தொற்று தொடர்பில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.