Home கனடா கிழக்கு யோர்க் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கிழக்கு யோர்க் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

by Jey

கிழக்கு யோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதுடன் மற்றும்மொருவர் காயமடைந்துள்ளார்.

விக்டோரியோ பார்க் அவன்யூ மற்றும் கிரசன்ட் டவுன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சித்துள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இரண்டாம் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

றொரன்டோ பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

related posts