மிஸ்ஸிசாகுவா தீ விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.
மிஸ்ஸிசாகுவாவின் பிரிட்டானியா வீதி மற்றும் எனபெல்ல அவன்யூ ஆகியனவற்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போதிலும், இரண்டு பேர் வீட்டினுள் சடலமாக கிடப்பதனை அவதானித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.