கனடாவின் மிஸ்ஸிசாகுவா பகுதியில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பாதசாரி ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்து உள்ளதாக பீல் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
கண்ட்ரி பாக் மற்றும் எட்வார்ட்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
வாகனத்தில் மோதுண்ட பாதசாரி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.