டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர்கள் முழுவதும் வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன .
டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) முடக்கப்பட்ட 5 இணைய சா்வா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இதன் பின்னணியில் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- எய்ம்ஸ் டெல்லி சர்வர்களை ஹேக் செய்தவர்கள் சீனர்கள். இது குறித்து பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், சீனர்கள் ஹேக் செய்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 100 சர்வர்களில், தற்போது 5 பிசிகல் சர்வர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சேதம் மிக மோசமாவதிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 5 சர்வர்களிலிருக்கும் தகவல்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், நோயாளிகள் மருத்துவா்களுடான சந்திப்பிற்கான இணைய பதிவு வசதி, அத்தியாவசியமான மருத்துவ பிரிவுகளின் சா்வா்கள் இன்னும் செயல்படத் தொடங்கப்படவில்லை. மேலும், ஆய்வக சேவைகள் காகித வழியிலான கைமுறை முறையில் இயங்குகின்றன என எய்ம்ஸ் நிா்வாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.