Home இலங்கை ஹம்பாந்தோட்டையில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான கப்பல்

ஹம்பாந்தோட்டையில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான கப்பல்

by Jey

தெற்காசிய பிராந்திய வலயத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான கப்பல் ஒன்று அண்மையில் நீரில் மூழ்கிய நிலையில் ஹம்பாந்தோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை கொடவாய என்னும் பகுதியில் இந்த கப்பல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கப்பலை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க தூதரக நிதியத்தின் ஊடாக 82900 டொலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி ச்சாங் இந்த நிதி உதவியை அதிகாரபூர்வமாக வழங்கியுள்ளார்.

இலங்கை சுழியோடிகளினால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த கப்பல், ஆசிய பிராந்திய வலத்திலும் உலக அளவிலும் நீரில் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பழமையான கப்பல்களில் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கப்பலை பாதுகாத்து, இதனை ஆவணப்படுத்துவதன் மூலம் பண்டைய காலம் முதல் இலங்கை கப்பல் கேந்திர மையமாக காணப்பட்டமையை உலகிற்கு எடுத்துரைக்க முடியும் என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அமெரிக்கத் தூதுவர் இந்த உதவு தொகையை இலங்கை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts