வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளியிடப்படும் நச்சு வாயுக்களின் அளவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக வளி மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது
இவ்வாறான சூழலிலேயே தற்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரும நோய்கள்
இதேவேளை கடந்த சில நாட்களாக கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் குளிரான காலநிலை பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் காலநிலை மாற்றத்தினால் சரும நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சரும வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல் அழற்சி, முகப்பரு, சரும புற்றுநோய் உள்ளிட்ட குறுகிய கால, நீண்ட கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சரும மருத்துவக் கல்லூரியின் தலைவர் வைத்தியர் ஸ்ரீயானி தெரிவித்துள்ளார்.
கால்நடை பாதுகாப்பு
இதேவேளை, இவ்வாறான காலநிலையில் தமது கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான பயிற்சிகளை வழங்குவது அவசியமாகும்.