கனடாவின் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் இத்துடன் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
வழமையாக நாடாளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் தினத்திற்கு முன்கூட்டியே இம்முறை அமர்வுகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு சபை அமர்வுகள் முன்கூட்டியே முடிவுறுத்தப்படுகின்றது.
பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏக மனதாக இணங்கி இவ்வாறு நாடாளுமன்ற அமர்வுகளை முன்கூட்டியே முடிவுறுத்திக் கொள்வது வழமையானதாகும்.
சட்டமூலங்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டு நிலைமை போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.