டொரொன்டோவில் வீதி விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் கனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் வீதி விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது நிலை வரும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் மழை போன்ற ஏதுக்களினால் இவ்வாறு வீதி விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் வெகுவாக காணப்படுகிறது என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாரதிகள் வீதிகளை பயன்படுத்தும் போது மிக நிதானமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து தொடக்கம் 15 சென்டிமீட்டர் வரையில் பணிப்படலம் காணப்படும் என முன்னதாக எதிர்வு கூறப்பட்டது பின்னர் இந்த எதிர்வுகூறல் 10 சென்டிமீட்டர் என குறைக்கப்பட்டது.
பாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாகவும் பனிமூட்டம் வெகுவாக காணப்படுவதாகவும், இதனால் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக டொரன்டோ பெரும்பாக பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாகன விபத்துக்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.