Home உலகம் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே நிலச்சரிவு

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே நிலச்சரிவு

by Jey

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாம் அமைத்து பலர் தங்கிருந்தனர்.

இந்நிலையில், இந்த வேளாண் பண்ணையில் இன்று அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆனால், இந்த நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். ஆனால், நிலச்சரிவில் 51 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

50-க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

related posts