Home இந்தியா 6 சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

6 சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

by Jey

பிரதமர் மோடி மேகாலயாவுக்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் இன்று காலை நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கவர்னர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், மற்றும் திரிபுரா மாநிலங்களை இணைக்கும் 6 சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஷில்லாங் தொழில் நுட்ப பூங்காவின் 2-ம் கட்ட பணிகளுக்கும், துராவில் ஒருங்கிணைந்த மருத்துவமனை மற்றும் கன்வென்சன் மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

மேலும் நிறைவடைந்த பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். இதன்பின்னர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

கால்பந்து மைதானத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் முன் அவர் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும்போது கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தனது செய்தியை பகிர்ந்து கொண்டார்.

related posts