டெல்லி ரெயில் நிலையத்தில் பயண சீட்டு பரிசோதகர்கள், போக்குவரத்து உதவியாளர்கள் அல்லது கிளார்க்குகள் போன்ற பணிகள் தருகிறோம் என கூறி தமிழகத்தில் இருந்து சென்ற 28 பேரிடம் ரூ.2.5 கோடி வரை பணமோசடி செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்த எம். சுப்புசாமி (வயது 78) என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். இவரே, அந்த மோசடி கும்பலிடம் தமிழக வாலிபர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
எனினும், அவர்கள் மோசடி கும்பல் என்று தனக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது என்றும், அவர்களிடம் தானும் சிக்கி கொண்டேன் என்று சுப்புசாமி கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, ஓய்வு பெற்றதில் இருந்து ஊரிலுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைப்பதற்கான உதவியை செய்து வருகிறேன்.
பணத்திற்காக எதுவும் செய்தது இல்லை என கூறியுள்ளார். அவர் அளித்த புகாரில், தமிழகத்தின் கோவையை சேர்ந்த சிவராமன் என்பவருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டது. டெல்லி எம்.பி. குடியிருப்பில் ஒருவராக அவர் வசிக்கிறார்.