Home கனடா வோகன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

வோகன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

by Jey

வோகன் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றாரியோவின் வோகனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சந்தேக நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முழுமையான விசாரணைகள் நடாத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

related posts