Home கனடா கனடாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு

கனடாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு

by Jey

கனடாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு பனி புயல் போன்ற சீரற்ற காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாரியோ, அல்பற்றா மற்றும் கியூபெக் போன்ற மாகாணங்களில் இந்த கடுமையான குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

மிக குறைந்த வெப்ப நிலை இந்த பகுதிகளில் பதிவாகி வருவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு கனடிய பகுதிகளில் மிக மோசமான குளிர் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை சீர்கேட்டின் காரணமாக சில பகுதிகளில் விமான சேவைகள் போக்குவரத்து என்பன பாதிக்கப்பட்டன.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் மக்களை அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் ரெஜினா பகுதியில் மழை 43 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலையை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts