கனடாவின் ஆல்பர்ட் ஐ வில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர் நூற்றுக்கும் மேற்பட்ட துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
21 வயதான இமேஜ் ரட்நாயக்க என்ற இளைஞர் மீது இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஆபாச காணொளிகளை பகிர்ந்தமை, பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இணைய வழியில் சிறுவர் சிறுமியரோடு தொடர்பு பேணி அவர்களை பாலியல் ரீதியாக செயற்பாடுகளை மேற்கொள்ள தூண்டியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் இந்த குற்றச்செயல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை பிணையில் ரத்ன நாயக்கர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் மீண்டும் கடந்த ஒன்பதாம் திகதி போலீசார் இந்த நபரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தொடர்பு பட்டிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.