றொரன்டோவில் எட்டு சிறுமிகள் நபர் ஒருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
றொரன்டோவின் பல்கலைக்கழக வீதி மற்றும் யோர்க் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பதின்ம வயதுடைய எட்டு சிறுமிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மதுபான போத்தல் ஒன்றை குறித்த நபரிடம் இருந்து பறித்தெடுப்பதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சிறுமிகள் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு சம்பவ இடத்தில் ஒன்றுகூடி உள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சிறுமிகள் 13 வயதினை உடையவர்கள் எனவும் அனைவருமே 16 வயதுக்கு கீழ் பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
59 வயதான நபர் ஒருவரே சிறுமிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.