அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இப்போது கோரப்பட்டாலும் கூட தேர்தல் ஆறு மாதங்களுக்கு பின்பே நடத்தப்படும் என்று அரச தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.
8 ஆயிரமாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக அல்லது 5 ஆயிரமாகக் குறைக்கும் நோக்கில் எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு சில மாதங்கள் எடுக்கும் என்பதால் 6 மாதங்களுக்குத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு அரச தரப்பு தீர்மானித்துள்ளது என்று அறியமுடிகின்றது.
இதவேளை, இந்தத் தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு ஒத்திப்போடுமாறு மொட்டுக் கட்சி உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொட்டு’, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளின் தலைமையிலேயே இந்தக் கூட்டணிகள் உருவாகவுள்ளன.
சிலவேளை, இந்தக் கூட்டணிகள் மூன்றாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு என்று கூறப்படுகின்றது.